அனோஜனின் மரண தண்டனை ரத்து: பிரதி வெளிவிவகார அமைச்சர் தகவல்

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உயர்நீதிமன்றம் நேற்று (13) ரத்து செய்துள்ளது.
இந்த தகவலை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திரா இன்று (14) உறுதிப்படுத்தினார்.

சவூதி அரேபியாவில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு பின்னர், 2026 ஒக்டோபர் 11 ஆம் திகதி, அனோஜன் சார்பில் சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேன்முறையீட்டைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
தீர்ப்பு ரத்து செய்யப்பட்டதை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா விசேட அறிக்கையொன்றின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இது விடயத்தில் சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்கும், எங்கள் தூதுவர், வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் அனோஜனை மீட்பதற்குரிய ராஜதந்திர மற்றும் சட்ட ரீதியிலான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதற்காக இலங்கையில் இருந்து சட்டத்தரணிகள் குழுவொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles