மாகாண சபைத் தேர்தலைப் பெற்றுக்கொள்வதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
“ஐக்கிய மக்கள் சக்தி, மதத்தை முதன்மைப்படுத்தி அரசியல் செய்யும் கட்சி கிடையாது. அனைத்து மதங்களையும் நாம் மதிக்கின்றோம். ஆனால், அரசாங்கம் பிரிவினையை ஏற்படுத்த முற்படுகின்றது.
அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு முதலில் மாகாண சபை முறைமை இருக்க வேண்டும்.
தெரிவுக்குழுக்களை அமைத்துத் தேர்தலை இழுத்தடிக்க அரசு முற்படுகின்றது. தேர்தலை நடத்துமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்” – எனவும் அவர் குறிப்பிட்டார்.










