“ மஹிந்த ராஜபக்சவின் நாமத்தை அழிப்பதற்கு இந்த அரசாங்கம் எதை செய்தாலும் , மக்களின் மனங்களில் மஹிந்த ராஜபக்சவுக்குள்ள அன்பு, மரியாதை ஒருபோதும் கடுகளவேனும் குறையாது. அது இருந்ததைவிடவும் மேலும் அதிகரிக்கும். வரலாற்றில் மஹிந்தவின் பெயர் தங்க எழுத்துகளால் எழுதப்படும்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.










