இலங்கை முழுவதும் இன்று ஒக்டோபர் 19 முதல் 21ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, தினமும் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனமான (NSO) அனுமதி கோரியுள்ளது.
நாட்டை நான்கு வலயங்களாகப் பிரித்து, ஒவ்வொரு வலயத்திலும் தலா ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக NSO நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இன்றைய தினத்திற்கான முன்மொழியப்பட்ட மின்வெட்டு மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெறக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
இதேபோன்ற மின்வெட்டை நாளை (20) மற்றும் புதன்கிழமை (21) ஆகிய தினங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த மின்வெட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.










