அக்குரணை கோர விபத்தில் மாத்தளை யுவதி பலி! தாய், தந்தை படுகாயம்!!

அக்குரணை, குருகொட 7ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த நால்வரில், மாத்தளை பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரும் உள்ளடங்குகின்றார்.

மாத்தளை, களுதாவளை – டிக்கிரியா பகுதியைச் சேர்ந்த வேலு சக்திவேல் மோகனகாந்தி (பிரியா) என்ற 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் காயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் உயிரிழந்த யுவதியின் சகோதரர் தெரிவிக்கையில்,

“வைத்தியசாலைக்கு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்று திரும்பும் வழியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. எனது தங்கை குடிப்பதற்கு ஏதாவது கேட்டார். அதனால், முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, ஜூஸ் வாங்குவதற்காகச் சென்றேன். திரும்பி வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் வைத்தியசாலையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து கலவை வாகனம் வாகனம், பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில், நேற்று நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் அறுவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles