கண்ணுக்கு தெரியாத ஆபத்து; இந்தோனேசியாவில் ஒரே மாதத்தில் 5,310 பேர் பலி

இந்தோனேசியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகை மாசு காரணமாக, கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 3,560 பேர் உயிரிழந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்சின்கியைத் தளமாகக் கொண்ட தூய காற்று மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டுத்தீயினால் வெளியேறிய புகை காரணமாக ஏற்பட்ட காற்று மாசுபாட்டினால், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாத உயிரிழப்பு மதிப்பீடு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதேவேளை, செப்டெம்பர் மாதத்தில் இந்தோனேசியாவில் சுமார் 5.78 கோடி மக்கள் ஆரோக்கியமற்றது முதல் அபாயகரமானது வரையிலான காற்றைச் சுவாசிக்க நேரிட்டுள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, காட்டுத்தீயிலிருந்து வெளியாகும் PM2.5 எனப்படும் நுண்துகள்கள் நுரையீரலுக்குள் ஊடுருவி இரத்த ஓட்டத்திலும் கலக்கக்கூடியவை என்பதுடன், இவை பல்வேறு நோய்கள் மற்றும் அகால மரணங்களுக்கான ஆபத்தை அதிகரிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இந்தோனேசியாவின் போர்னியோ தீவுப் பகுதி, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளிலும் நாட்டின் கிழக்குப் பகுதிகளிலும் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கிடையில், நகர்ப்புற மின் உற்பத்தி, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட காட்டுத்தீயுடன் தொடர்பில்லாத ஏனைய காற்று மாசுபாட்டு மூலங்களினால் மேலும் 1,750 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டெம்பர் மாதத்தில் இந்தோனேசியாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,310 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கடுமையான சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ காலநிலை நிகழ்வினால் தீவிரமடைந்த வறட்சி காரணமாக, இந்தோனேசியாவில் பல மாதங்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. கடந்த செப்டெம்பர் மாதம் வரையான ஒன்பது மாத காலப்பகுதியில் 19 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வன அழிப்பு கண்காணிப்பு அமைப்பான நுசந்தரா அட்லஸ் தெரிவித்துள்ளது.

இந்தக் காட்டுத்தீயினால் உருவான புகைமூட்டம் மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்குத் திமோர் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் காற்று மாசுபாட்டை அதிகரித்துள்ளது.

நிலத்தை விவசாயம் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளுக்காகத் தயார்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எரிப்பு நடவடிக்கைகள், குறிப்பாக மரம் வெட்டுதல், பாமாயில் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனங்களின் செயற்பாடுகள் காட்டுத்தீ பரவுவதற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இந்தநிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதுடன் மட்டுப்படுத்தாமல், தீப்பரவலுக்கு உள்ளாகக்கூடிய சதுப்பு நிலங்களை மீளமைத்தல், சட்டவிரோத நில எரிப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குப் பொறுப்பான நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 72,000 இற்கும் அதிகமானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2,100 இற்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், 53 இலட்சம் முகக்கவசங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles