மைதானத்தில் சரிந்த கனவு: 30 வயதில் உயிரிழந்த கால்பந்து வீரர்

 

ஸ்பெயினின் இரண்டாம் பிரிவு கால்பந்துப் போட்டியின்போது படுகாயமடைந்த டெனெரிப் அணியின் முன்கள வீரர் ஜெசுஸ் டி மிகுவேல் (30) உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை எப்.சி. அன்டோரா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, கோல் காப்பாளர் ஜெசுஸ் ஓவோனோவுடன் வேகமாக மோதி ஏற்பட்ட விபத்தில் டி மிகுவேலின் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து மைதானத்திலேயே அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை திங்கட்கிழமை சீராக இருந்தாலும் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், செவ்வாய்க்கிழமை காலை உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், இலங்கை நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் டெனெரிப் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தத் துயரச் செய்தியை நம்ப முடியாமல் நெஞ்சம் உடைந்த நிலையில் உள்ளோம். ஜெசுஸ் டி மிகுவேல் அலமேடாவின் மறைவை டெனெரிப் கழகம் ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறது.

இந்தப் பேரிழப்பால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, மேலதிக நேரத்தின் ஏழாவது நிமிடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீண்ட தூரத்திலிருந்து வந்த பந்தைத் தடுக்க கோல் காப்பாளர் ஓவோனோ மைதானத்தின் மத்திய பகுதியை நோக்கி ஓடியபோது, அவரது முழங்கால் டி மிகுவேலுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து டி மிகுவேல் மைதானத்தில் அசைவற்ற நிலையில் கிடந்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து ஓவோனோவுக்கு நடுவர் நேரடி சிவப்பு அட்டை காண்பித்ததுடன், போட்டியையும் கைவிட்டார். இரு அணிகளின் வீரர்களும் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்ததுடன், டெனெரிப் அணியின் பல வீரர்கள் கண்ணீர் விட்டு அழுததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் ஊடகங்களின் தகவலின்படி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அம்புலன்ஸில் டி மிகுவேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவப் பணியாளர்கள் அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு மூன்று வருட ஒப்பந்தத்தில் டெனெரிப் அணியில் இணைந்த அவர், அந்த அணிக்காக 29 போட்டிகளில் விளையாடி 11 கோல்களைப் பெற்றிருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles