பாதீட்டில் பெருந்தோட்ட வீடமைப்புக்கான நிதியை உயர்த்து: கொழும்பில் போராட்டம்

மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமையையும், கண்ணியமான வீட்டு வசதியையும் உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி கொழும்பில் இன்று (11) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்தில், மலையக மக்களுக்கு 20 பேர்ச் காணி வழங்குவதுடன், தோட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வருடாந்தம் 50 வீடுகளை அமைப்பதன் மூலம் மலையக மக்களின் வீடமைப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது எனச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், சொந்தமாக வீடு அமைக்க விரும்புவோருக்குக் காணிகளையும், குறைந்த வட்டியில் இலகு தவணைக் கடன் வசதிகளையும் வழங்குமாறு கோரினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அன்டனி ஜேசுதாசன், மலையக மக்களின் காணிகள் குத்தகைக்கு விடப்படுவதோ அல்லது விற்பனை செய்யப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தித்வா புயலால் பாதிக்கப்பட்டு இன்னமும் பாடசாலைகள் மற்றும் தற்காலிகக் கூடாரங்களில் வசிக்கும் மக்களையும் விரைவில் மீள்குடியேற்றி, அவர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இதன்போது, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி செயலகப் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்ததாக பி. முத்துலிங்கம் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles