தேர்தலை நடத்துங்கள்: பிக்குகளின் பலம் தெரியும்! அரசுக்கு எச்சரிக்கை

தேர்தலை நடத்துங்கள்: பிக்குகளின் பலம் தெரியும்! அரசுக்கு எச்சரிக்கை

” இந்நாட்டில் பிக்குகள் உறங்கிக்கொண்டுள்ளனர் என நினைக்க வேண்டாம். தேவையான நேரத்தில் நிச்சயம் எழுவார்கள். அந்த நாள் வரும்போது என்ன நடக்கின்றது என பார்ப்போம்.

தலைக்கவசம் மற்றும் தடிகளுடன் நாம் வீதிக்கு இறங்கப்போவதில்லை. நீங்கள் (அரசாங்கம்) தேர்தலை நடத்துங்கள். அப்போது உங்களை இல்லாது செய்தே எமது பயணத்தை நிறுத்துவோம்.”

இவ்வாறு இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் உரையாற்றும் பிக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

…………….

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

வெளிநாட்டு பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கை பிரஜையொருவர் அல்லது இலங்கை பிரஜை அல்லாத வேறொரு நாட்டின் பிரஜை ஒருவர் இலங்கையில் சமுகமாயிருக்கையில், அல்லது இலங்கைக்கு வெளியே தவறிழைத்திருந்து அது அந்நாட்டின் சட்டத்தின் கீழ் தவறொன்றாக இருப்பின் இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் நடவடிக்கை எடுக்க முடியும்.

பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல் அல்லது அதில் பங்குபற்றுதல், பயங்கரவாத பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தவறுகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

……………..

அதிபர் சேவையில் சம்பள முரண்பாடு; தீர்வு காண உபகுழு ஆராய்வு

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உபகுழு விரிவாக ஆராய்ந்துள்ளது.

உபகுழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிபர் சேவைத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கல்வி, நிதி அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது, அது பதவி உயர்வாகக் கருதப்படாமல் புதிய நியமனமாகக் கருதப்படுவதால் சம்பள முரண்பாடுகள் ஏற்படுவதாகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இதனால், அனுபவமிக்க சிரேஷ்ட ஆசிரியர்கள் அதிபர் சேவையில் இணைவதற்கு தயக்கம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து, சம்பள ஆணைக்குழுவுக்கு உரிய பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.

மேலும், அதிபர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

…………….

இரு பகுதிகளில் கோர விபத்து: பெண் உட்பட இருவர் மரணம்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இருவேறு மோட்டார் சைக்கிள் விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, சங்கராஜ மாவத்தையில் நேற்றுக் காலை தென்னேகும்புர திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சறுக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் பின்னால் பயணித்த பெண்ணும் உடனடியாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பின்னால் பயணித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதேவேளை, பாணந்துறை, கிம்பத மாவத்தையில் நேற்று இரவு திக்கள திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் கை வண்டியைத் தள்ளிச் சென்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மேற்படி நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் காயமடைந்து சிகிச்சைக்காகப் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி இரண்டு விபத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

…………..

தலையில் 14 தையல்களுடன் வெளியேறினார் ராஜாங்கனை தேரர்

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பிக்குகள் முன்னெடுத்த போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான ராஜாங்கனை சத்தரதன தேரரின் தலையில் 14 தையல்கள் போடப்பட்டுள்ளன.

எனினும், அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

தனது உயிருக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகப் பதிவொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், மீண்டும் ஏதேனும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டால் அநுராதபுரத்துக்குத் திரும்புவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது சிகிச்சையின்போது உதவிய மருத்துவப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

……………

‘பட்ஜட்’ வெற்றுவேட்டு மட்டுமே! மனோ கடும் அதிருப்தி

பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஜனாதிபதி கண்டுகொள்ளவில்லை எனவும், ஒட்டுமொத்தத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வெறும் வெற்றுவேட்டு மாத்திரமே எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட உரை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து நீண்ட உரையாற்றினார். ஜனாதிபதி வெறும் கணக்குப்பிள்ளை போல் இருக்கக் கூடாது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நான் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தேன். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மலையக மக்களின் அத்தியாவசியத் தேவைகள் எவற்றையும் ஜனாதிபதி கருத்தில்கொள்ளவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளமான 200 ரூபா கொடுப்பனவைத் தொடர்ச்சியாக வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால், இன்று பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைச் செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி அறியவில்லையா?

மலையக வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்ட போதிலும், 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் இதுவரையில் வெறும் 50 வீடுகள் அளவு மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை.” – என்றார்.

…………..

1,597 கிலோவுக்கும் அதிகமான இலைகள் மீட்பு – நால்வர் கைது!

சிலாபம், தலவில வெல்ல பகுதியில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பீடி இலைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

தோடுவாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த நவம்பர் 12ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 799 கிலோ 900 கிராம் எடையுடைய பீடி இலைகள் அடங்கிய 22 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகொன்றும் லொறியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நால்வரும் தோடுவாவ, இரணவில மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த 27, 47, 53 மற்றும் 63 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் நேரடியாகக் கடத்தலில் ஈடுபட்டமைக்காகவும், ஏனைய இருவர் உடந்தையாக இருந்தமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சுற்றிவளைப்பு தொடர்பில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் மிதந்துகொண்டிருந்த மேலும் 797 கிலோ 300 கிராம் எடையுடைய பீடி இலைகள் அடங்கிய 20 பொதிகள் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மொத்தமாக 1,597 கிலோ 200 கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தோடுவாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles