இலங்கையில் இன்று 3 ஆயிரத்து 838 கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி கடந்த 29 ஆம் கொழும்பில் ஆரம்பமானது. முதல் நாளில் 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று 9 ஆயிரத்து 983 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 9 நாட்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 148 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.











