அரசியல் நாகரீகமும் இல்லாமல் , சுயமனித ஒழுக்கமும் இல்லாமல் தொடர்ந்து மாற்று கட்சியினரை விமர்சிப்பதையே தனது அரசியலாக சிவனேசன் கொண்டுள்ளார். உள்வீட்டு பிரச்சனையே ஓராயிரம், இதில் அடுத்தவர் வீட்டு கதவை தட்டுகிறார் என மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி பொதுச்செயலாளர் சுரேன் கதிர்காமத்தம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையகத்தில் மக்களின் உரிமைக்குரலாய் சந்திரசேகரனால் தொடங்கபட்டு இன்று ஒரு தனி தாற்பறியத்துடன் பயணிப்பதே ம.ம.மு .
கல்விமான்களை புத்திஜீவிகளையும் , சமூக ஆர்வாலர்களையும் எப்போதும் கொண்டுள்ள ஒழுக்கம் நிறைந்த எம்மை போன்ற அமைப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.கூட்டணி பிளவுபட்டால் மாகாண சபை தேர்தல்களில் இலகுவில் வெல்ல முடியும் என்ற ஒரு குறுகிய எண்ணத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் சிவனேசன் ஈடுபடுகின்றார்.
சிறந்த ஆளுமை மற்றும் அரசியல் அறிவு கொண்ட திலகரை வெளியேற்றி விட்டு , தம் உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்யாமல் எம்மை நோக்கி விரல் நீட்டுகின்றார்.ஒரு பொதுச்செயலாளரை தெரிவு செய்ய முடியாத கட்சி எம்மை விமர்சிப்பதில் அர்த்தமில்லை வேடிக்கைக்குறியது,
மேலும் எமது கட்சியின் கட்டமைப்பை பற்றி அவர் கவலை பட தேவையில்லை! நாம் சரியாக செயற்பட கூடியவர்களை இனம் கண்டு வாய்ப்பு வழங்கி வருகின்றோம் மலையகத்தில் சரியான ஜனநாயகம் நிறைந்த கட்சி நாம் தான்! எம்மில் தலைவர் மட்டும் முடிவெடுப்பதில்லை தலைவரின் வழிகாட்டலில் கவுன்சில் ,மத்திய குழு போன்ற முக்கிய சபைகளில் தீர்மானிக்க படுகின்றன!
யாரையும் நாம் ஒதுக்கவில்லை கட்சியுடன் பயணிக்க சொல்கின்றோம் வாய்ப்பு வரும்போது வழங்குவோம்.இனியொருமுறை இவ்வாறு விமர்சனம் படுத்தினால் விளைவு எதிர்பாராத விதமாக இருக்குமென சுரேன் கதிர்காமத்தம்பி குறிப்பிட்டார்.
