பசறையில் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய அங்காடி வியாபாரி கைது!

பசறை நகரில் கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை நகரில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அங்காடியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  இதனையடுத்து அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு சென்று பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என குறித்த நபருக்கு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற அந்நபர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால்   பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அயலவர்கள் உதவியுடன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக நபரைஸபசறை பொலிஸார் கைது செய்து. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் பசறை ராமு தனராஜா.

Related Articles

Latest Articles