நாட்டில் இதுவரை 80 இற்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் ‘லொக்டவுன்’

நுவரெலியா உட்பட 5 மாவட்டங்களின் மேலும் 9 கிராம சேகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில், நோர்வூட் பொலிஸ் பிரிவில், இன்ஜஸ்றி கிராம சேவகர் பிரிவும், ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில், கங்குல்விட்டி , பொத்துபிட்டி வடக்கு, கலவான ஹப்புகொட கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில்
வில்லோர தோட்டம் கிராம சேவகர் பிரிவும் , களுத்துறை மாவட்டத்தில் போம்புவல கிராம சேவகர் பிரிவும் இன்று காலை முதல் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கடந்த 21 ஆம் திகதி முதல் இன்றுவரை 82 கிராம சேவகர் பிரிவுகளும், 6 இற்கும் மேற்பட்ட பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles