130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா – இருவரின் நிலைமை கவலைக்கிடம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 130 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது எனவும் குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளான அதிகமான கர்பிணிகள் முல்லேரியா, நெவில் பெர்னாண்டோ மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்ப்பிணி பெண்கள் இயலுமானவரை வீட்டில் இருந்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறும், சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles