முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 7 ஆயிரத்து 864 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2020 ஒக்டோபர் 30 திகதி முதல் 2021 மே 10ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 548 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாட்டில் பல பகுதிகளிலும் பொலிஸாரின் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
