நாட்டில் மேலும் 1,786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 786 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 21 ஆயிரத்து 730 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 921 பேர் பலியாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles