கொரோனாவால் 41 வயதுக்கு குறைவான 51 பேர் இதுவரை பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் 41 வயதுக்கும் குறைவான 51 பேர் நேற்றுவரை பலியாகியுள்ளனர் – என்று கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி 0-9 வயதுக்கிடைப்பட்ட இருவரும், 10 – 30 வயதுக்கிடைப்பட்ட 15 பேரும், 31-40 வயதுக்கிடைப்பட்ட  34 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 41 – 50 வயதுக்கிடைப்பட்ட 87 பேரும், 51 – 60 வயதுக்கிடைப்பட்ட 171 பேரும், 61 – 70 வயதுக்கிடைப்பட்ட 321 பேரும், 71 வயதுக்கும் மேற்பட்ட 567 பேரும் இதுவரை பலியாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles