நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 745 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இன்று தற்காலிகமாக பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளதால் விசேட பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
