கொரோனா வைரஸ் தொற்றால் 2021 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்று வரை 591 பேர் உயிரிழந்துள்ளனர் – என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
343 ஆண்களும், 248 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையில் 13 பேர் மட்டுமே பலியாகினர். எனினும், 2ஆம் மற்றும் 3ஆம் அலைகளிலேயே அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ சங்கங்களும், வெளிநாட்டு ஆய்வு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
