‘லொக்டவுன்’ மோதல்கள் – 150 மேற்பட்டோர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதி!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இக்காலப்பகுதியில் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளில் ஏற்பட்ட மோதல்களால் ஏற்பட்ட காயத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரை 150 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் அதிகளவானோர் ஆண்களாவர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 112 ஆண்கள் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Articles

Latest Articles