பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது என பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
ஹாலி-எலையில் நேற்று மாலை உயிரிழந்த 20வயது நிரம்பிய யுவதியின் மரணத்துடன், மேற்படி அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
இவ்வகையில், பதுளையில் 8பேர், வெலிமடையில்7பேர்,தியத்தலாவையில்7பேர், பண்டாரவளையில்6பேர்,பசறையில் 2பேர் என்ற வகையில் 30பேராக,உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை பதுளை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 458 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை
