‘உணவுப்பொருட்களின்றி நுவரெலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தவிப்பு’

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதம் காணப்படுவதாகவும் இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பல குடும்பங்கள், உணவின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக ஹட்டன் பொகவந்தலா, புளியாவத்தை, நோர்வூட், வெஞ்சர் வெலிஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் குறித்த குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுகள் வழங்கும் பொறுப்பினை அப்பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த கிராம சேவகர்கள் உரிய நேரத்தில் குறித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக இந்த குடும்பங்கள் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தினை பொறுத்த வரையில் பெரும்பாலான குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுகளையே கையிருப்பில் வைத்திருப்பர். இன்னும் சில குடும்பங்கள் அன்றாடம் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்வர். இந்நிலையில் திடீரென தனிமைப்படுத்தப்படுவதனால் அதிகமானவர்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு வகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகின்றன.

இதனை நிவர்த்தி செய்வதற்காகவே அரசாங்கம் இரண்டு கிழமைக்கு தேவையான உணவு பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற போதிலும் இதனை உரிய முறையில் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படாததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

சில கிராம சேவகர்கள் 14 நாட்கள் முடிந்த பின்பே இவர்களுக்கு குறித்த உணவு பொருட்கள் வழங்குவதாகவும் இன்னும் சிலர் முடிந்த பின் கூட வழங்காது இருப்பதாகவும் இது குறித்து எந்த ஒரு அரசியல் மற்றும் அதிகாரிகள் தேடிப்பார்ப்பதில்லை என்றும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தனது வாசலில் 14 நாட்களுக்கு எவரும் தொடர்பினை பேணக்கூடாது என்று ஒட்டிவிட்டு செல்வதனால் அவசரத்திற்கு ஒரு பொருட்கள் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் ஒரு சில அயலவர்களின் உதவிகள் காரணமாக ஒவ்வொரும் நாளும் சமாளித்துக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்

இது குறித்து இரானுவ தளபதி சவேந்திர சில்வா அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் மின் அஞசல் மூலம் தங்கள் படும் துயரங்களை தெரிவித்துள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படுவர்களின் நலன் குறித்து இதை அக்கறை செலுத்தி அவர்களுக்கு தேவையான வற்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற உலர் உணவு பொருட்கள் உரிய நேரத்தில் உரியவர்களை சென்றடைகின்றனவா அல்லது அவை முறையாக பகிறப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்றும்  சுட்டிக்காட்டுகின்றனர்.

கே. சுந்தரலிங்கம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles