வெள்ளம், மண்சரிவால் 995 வீடுகளுக்கு சேதம் – 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் பாதிப்பு

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. ஐவர்  காயமடைந்துள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளார் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 மாவட்டங்களில் 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 978 வீடுகள் பகுதியளவும், 17 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் மேற்படி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரத்து 107 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் 106 பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்களே சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles