‘ மரக்கறி, பழங்களை இலவசமாக வழங்க அமைச்சரவை அனுமதி’

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் விற்பனை செய்ய முடியாத மேலதிக மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்து, அரசாங்கத்தினூடாக விநியோகிக்கும் திட்டத்தை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வருமாறு,

அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் தங்களது உற்பத்திகளை குறிப்பாக மரக்கறிகள் மற்றும் பழவகைகளை வழக்கமான முறையில் போக்குவரத்துச் செய்யவும் விற்பனை செய்யவும் இயலாமையால் அழிவடைந்து போகும் நிலையில், சிறிய மற்றும் நடுத்தர அதேபோல் பாரிய விவசாயிகள் பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றமை தெரிய வந்துள்ளது.

மேலும், நுகர்வோர் நியாய விலையில் தரமான மரக்கறிகள் மற்றும் பழவகைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதற்கமைய, பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் விற்பனை செய்ய இயலாத தொகையான மரக்கறிகள் மற்றும் பழவகைகளை மாவட்ட விலைமனுக் குழுவின் விலையின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கும்,

அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தொகையான மரக்கறிகள் மற்றும் பழவகைகளை பயணத்தடை முடிவுறும் வரை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கும், அனைத்து அரச மருத்துவமனைகளுக்கும், முப்படையினர் மற்றும் இடம்பெயர்ந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கும் தேவைக்கேற்ப இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர்   சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles