கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை கொழும்பு மாவட்டத்தில் 60 ஆயிரத்து 470 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 44 ஆயிரத்து 565
பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 22 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், கடந்த 24 மணிநேரத்துக்குள் கொழும்பு மாவட்டத்தில் 322 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 364 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 292 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.











