இராணுவ வாகனம் விபத்து – இருவர் பலி! நால்வர் படுகாயம்!!

மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள கறுத்தப்பாலத்தின் கீழே நீரோடையில் வீழ்ந்து இராணுவ ரக் வாகனமொன்று, இன்று   விபத்துக்குள்ளானதில் இரு இராணுவத்தினர் பலியாகினர். அத்துடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை மீறிய நிலையிலேயே ரக் விபத்துக்குள்ளாகியுள்ளது.  நீரோடையில் இருந்து இராணுவ ரக்கை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles