எரிப்பொருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் பிரதேசசபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்விற்க்கு மிதி வண்டியில் சென்று எதிர்ப்பினை வெளியிட்டனர்.
எரிப்பெருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் பிரதேசசபையின் தமிழ்முற்போக்கு கூட்டணியின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 25.06.2021. வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டி அணிந்து மிதிவண்டியின் மூலமாக நோர்வூட் பிரதேசசபையின் அமர்விற்கு சமுகம் அளித்தனர் பொகவந்தலாவை ஹட்டன் பிரதான வீதியின் ஊடாக மிதிவண்டியில் சமூகமளித்தனர்.
இதன் போது, ‘விலையேற்றத்தின் விலையினை உடனடியாக குறைக்க வேண்டும்’, ‘விலையேற்றி பொதுமக்களின் வயிற்றில் அடிக்காதே’, ‘நல்லாட்சி அரசாங்கத்தை குறை கூறி வந்த ராஜபக்ஸ மக்களின் வயிற்றில் அடிக்கிறது’. போன்ற
பதாதைகளை ஏந்தியவாரு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நட்டில் தற்பொழுது எரிப்பொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் வாகனங்களில் பயணிக்க முடியாது, இன்று எரிப்பொருளின் விலை
அதிகரிக்கபட்டுள்ளமையால் மலையக பெருந்தோட்டங்களில் நாளாந்த தொழிலாக மேற்கொள்ளும் முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் பெரிதும்
பாதிக்கபட்டுள்ளனர் .
இதேவேளை, நாளுக்கு நாள் அரிசியின் விலை, பால்மாவின் விலை போன்ற அத்தியாவசிய பொருடகளின் விலை அதிகரிக்கபடுகிறது விவசாய செய்கையின் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பசளை இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










