மைத்திரிக்கும் அமைச்சு பதவியா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக பதவியேற்கவுள்ளார் என வெளியான தகவலை அவரின் ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.

பஸில் ராஜபக்ச அமைச்சராக நியமிக்கப்படவுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும், அவர் சுற்றாடல்துறை அமைச்சு பதவியை கோரியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே அத்தகவலை நிராகரித்து, எந்தவொரு பதவியையும் மைத்திரிபால சிறிசேன கோரவில்லை என அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles