தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பில் பங்கேற்றனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், வேலுகுமார் எம்.பி., உதயா எம்.பி. ஆகியோரும் , முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூக் ஹக்கீமும், செயலாளர் நிசாம் காரியப்பரும், ஜே.வி.பியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும், பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.
தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படுமானால் அது முற்போக்கு சிந்தனையுடன், ஜனநாயகத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும். அனைத்து இன மக்கள் மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கொள்கை ரீதியில் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடனும் இச்சந்திப்பு தொடரவுள்ளது.
