‘அரசியல் பழிவாங்கள்’ – முறைப்பாடுகளை பதிவுசெய்ய குழு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்காகவும் விசேட குழுவொன்ற பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கியுள்ளது.

அக்குழுவின் தலைவராக மாத்தளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சியின்கீழ் பழிவாங்கல் படலம் தொடர்வதாகவும், நேர்மையாக செயற்படும் அரச ஊழியர்கள்கூட ஒடுக்கப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles