நாட்டில் மேலும் மூன்று மாவட்டங்களில் ‘டெல்டா’ தொற்று!

நாட்டில் மேலும் சில டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு கடந்தவாரம் அனுப்பப்பட்ட 141 மாதிரிகளில் 14 பேருக்கு அதிக வீரியம் கொண்ட  டெல்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலே இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக தெமட்டகொடை பகுதியிலும் டெல்டா தொற்றாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை 18 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles