சிறுமி விவகாரம் – சிக்கும் முக்கிய புள்ளிகள்! தேடல் வேட்டை தீவிரம்!!

கொழும்பு, கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தொழிலுக்காக இணையம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருவதுடன், கைதுகளும் இடம்பெறுகின்றன .

இதன்படி மேலும் இரு முக்கிய புள்ளிகள் கை செய்யப்பட்டுள்ளனர். இதில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் மாலைதீவின் முன்னாள் நிதி அமைச்சரொருவரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். அந்தவகையில் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 34 பேர் சிக்கியுள்ளனர்.

பலகோணங்களில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles