முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்தவாரம் முதல் தடுப்பூசி

நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்தவாரம் முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டிலுள்ள 10,155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

Related Articles

Latest Articles