அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமயில் சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தாங்கியிருந்த பதாதைகள் தனி சிங்கள மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
தமிழ் மொழி உரிமைக்காக உரத்துக்குரல் எழுப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், வடக்கு மாகாணத்தில் முன்னாள் முதல்வர் விக்கேஸ்வரன் எம்.பி. உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் மொழிக்கு இடமளிக்கபடாததால் இரு தமிழ் எம்.பிக்கள் இடைநடுவிலேயே வெளியேறிவிட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.
