நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (12) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதும்பொல மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் 6 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெடபுலா மத்திய தோட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.

