2ஆவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் Online கற்பித்தலில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் (13) தொடர்கின்றது.

நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் நேற்று (12) காலை இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

தமது கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சு இதுவரையில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

Related Articles

Latest Articles