நுவரெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 23 பேருக்கு கொரோனா

நுவரெலியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட  23 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று நுவரெலியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனிவிரட்ன தெரிவித்தார்.

வைத்தியர்கள் மூவருக்கும் , 13 தாதியர்களுக்கும்,  கனிஷ்ட பிரிவு சுகாதார ஊழியர்கள் 7 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.  இவர்களில் சிலர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.  குறைந்தளவான நோய் அறிகுறிகள் தென்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் தற்போதுள்ள வளத்தை பயன்படுத்தி வைத்திய சேவை தொடர்கின்றது எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

நிருபர் – டி,சந்ரு

Related Articles

Latest Articles