‘கொரோனா தொற்று – மரண எண்ணிக்கையில் எச்சரிக்கை மட்டத்தில் பதுளை’

பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பம் முதல் இன்று 26.8.2021 வரையிலான காலப்பகுதியில் கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பலனின்றி மொத்தமாக 234 பேர் உயிரிழந்துள்ளனரென்று பதுளை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் பணியகத்தினர் குறிப்பிட்டனர். இவ்விடயத்தை பதுளை மாவட்ட செயலகமும் உறுதிப்படுத்தியது.

பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, எல்ல, ஹல்துமுள்ளை, ஹாலிஎல . ஹப்புத்தளை,ஹாலிஎல ,ஹப்புத்;தளை. கந்தகெட்டிய, லுணுகலை, மகிய்ஙகனை, மீகாகியுல, பசறை, ரிதிமாலியத்த, சொரனாதொட்ட, ஊவாபரனகம, வெலிமடை ஆகிய பிரதேச செயலகப்பகுதிகளிலேயே, மேற்படி உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வகையில் பதுளை – 36 பேர் , பண்டாவளை -22பேர், எல்ல- நான்குபேர், ஹல்துமுள்ளை –எட்டுபேர், ஹாலிஎல – 29பேர் , ஹப்புத்தளை – 19பேர், கந்தகெட்டிய -இரண்டுபேர், லுணுகலை – ஏழுபேர், மகியங்களை – 25பேர்; மீகாகிவுல நான்குபேர், பசறை 16பேர், ரிதிமாலியத்த – ஆறுபேர், சொரணாதொட்ட நான்குபேர், ஊவாபரனகம – 18பேர், வெளிமட 34பேர், என்றடிப்படையில் மொத்த உயிரிழப்புக்கள் இருந்து வருகின்றன.

மேலும் 26.8.2021 ன் 24 மணித்தியாலங்களிலும் மட்டும் 480 பேர் கோவிட் 19 தொற்றளார்கள் அடையாளம் கணப்பட்டிருப்பதாக பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலனியினர் தெரிவித்தனர்.

நாட்டின் கோவிட் 19 தொற்றாளர்கள் மற்றும் அத்தொற்றினால் மரணமடைபவர்களின் தொகை அதிகரிப்பில் பதுளை மாவட்டம் நான்காம் இடத்தில் இருந்து வருகின்றமையும் புள்ளிவிபரப்பட்டியல் மூலம் தெரிய வருகின்றது.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles