சமுர்த்தி வங்கிகளில் கடன் பெற்றுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, வங்கி நிர்வாகத்தினர் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகதொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
” தோட்டங்களை மையப்படுத்தி நுண்நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்கியுள்ளமைபோன்று சமுர்த்தி வங்கியும் கடன்களை வழங்கியுள்ளன. இதன்படி சமுர்த்தி வங்கியில் தோட்டப்புற மக்கள் அதிகமான கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடுகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று காலம். நாடு முடக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வருமானம் இல்லை. வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடன் தவணையை உடனடியாக செலுத்துமாறு வங்கிகள் அழுத்தம் கொடுக்கின்றன. இது பெரும் அநீதியாகும். எனவே, மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். கடன் தவணைகளை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆளுங்கட்சியிலுள்ள மலையக அரசியல் பிரமுரகர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.” – என்றும் சிவநேசனம் கோரிக்கை விடுத்தார்.
