பலாங்கொடையில் பயங்கரம்! கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை!!

பலாங்கொடை – வெலேகும்புற, மெதகந்த தோட்டத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மெதகந்த தோட்டத்தை சேர்ந்த 59 வயதான ஒருவரே நேற்றிரவு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தோட்டத்தொழிலாளர் தொடர் குடியிருப்பில் உள்ள வீடொன்றின் சுவர் காரணமாக ஏற்பட்ட தகராறினால் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles