தலவாக்கலையைச் சேர்ந்த மாணவன் முல்லைத்தீவில் சாதனை!

தலவாக்கலையைச் சேர்ந்த யூட் நிலக்சன் என்ற மாணவன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சை எழுதி சாதனையினை நிலைநாட்டியுள்ளான்.

தலவாக்கலையினைச் சேர்ந்த குறித்த மாணவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில் உறவினர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆரோவனம் சிறுவர் விடுதியில் கல்வியைத் தொடர்ந்த மாணவன் அதன் பின்னர் முல்லைத்தீவில் அருட்தந்தை றொபின்சன் அடிகளாரின் கற்பித்தலின் கீழ் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர் விடுதியில் நின்று கல்வி கற்று வந்துள்ளான்

இந்நிலையில் ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் எந்த தொழில்நுட்ப தொலைத்தொடர்பு சாதனங்களும் அற்ற நிலையில் நிகழ்நிலை கல்விகூட கற்காத நிலையில் 4A, 2B, 2C என சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார்.

எதிர்காலத்தில் உயர் தரத்தில் கலைப் பிரிவினைத் தெரிவு செய்து பல்கலைக்கழகம் சென்று பல கல்விமான்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் கல்வி கற்று வருவதாக மாணவன் தெரிவித்துள்ளார். தனது கற்றல் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles