A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த முடியாது என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும், பரீட்சைக்கு தயாராவதற்கும் கால அவகாசம் வேண்டும். எனவேதான் பரீட்சைகள் பிற்போடப்படுகின்றன.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பன கலந்துரையாடி புதிய திகதியை விரைவில் அறிவிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

 

Related Articles

Latest Articles