2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், டிசம்பர் 10 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
நவம்பர் 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு விவாதத்தையும், 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை குழுநிலை விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ஆம் திகதி மாலை 5 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.
