அனைத்து ரக அரிசிகளின் விலைகளும் இரண்டு வாரங்களில் அதிகரிக்கும் -அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்

அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அனைத்து அரிசி விலைகளும், 25 முதல் 50 ரூபாய் வரை கட்டாயம் அதிகரிக்கும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், அரசாங்கம் உடனடியாக அரிசிக்கான குறைந்தபட்ச சில்லறை விலையை வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

 

பொலன்னறுவையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது காணப்படும் பசளை நெருக்கடி காரணமாக பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல் சந்தைக்கு வருவது 50 வீதமாக குறைந்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம். அத்துடன் எதிர்காலத்தில் அனைத்து ரக அரிசிகளின் விலைகளும் நுகர்வோர் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் தற்போது அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து வருவதால், அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் அரசி விலையை கட்டுப்படுத்துவதில் இருந்து அரசாங்கம் விலகி சுமார் இரண்டு வாரங்கள் கடந்துள்ளன எனவும் ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles