கதிர்காமம் கோவிலில் ‘மெகா’ கொள்ளை! 38 பவுண் தங்கத்தகடு மாயம்!!

கதிர்காமம் முருகன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 38 பவுண் எடையுடைய தங்க தகடொன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்கத்தகடே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னரே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சிஐடி விசாரணையும் ஆரம்பமாகியுள்ளது.

சிசிரிவி காட்சிகள் உட்பட மேலும் சில விடயங்களை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் பல கோணங்களில் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles