பசறையில் கோவில் உடைக்கப்பட்டு முருகன் சிலை கொள்ளை!

பசறை, கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமையப்பெற்றுள்ள 50 வருடங்கள் பழமைவாய்ந்த சிவசுப்ரமணியர் ஆலயம் உடைக்கப்பட்டு, உலோகத்திலான முருகப்பெருமானின் சிலை களவாடப்பட்டுள்ளது.

இன்று மாலை வேளையில் கோயில் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் சிலை காணாமல் இருப்பதை அறிந்த தோட்ட மக்கள் பசறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த முருகப்பெருமான் வள்ளி சமேதராய் எழுந்தருளி சிலை ஆலயத்தில் காணாமல் போயுள்ளமைத் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிருபர் – நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles