ரம்புக்கனையில் மண்சரிவு – நால்வர் பலி!

கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட ரம்புக்கனை , தொம்பேமட பகுதியில ஏற்பட்ட மண்சரிவினால் நால்வர் பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீடொன்றின்மீதே மண்மேடு இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது எனவும், இதனால் வீட்டுக்குள் இருந்த நால்வரும் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்றது. கேகாலை உட்பட மேலும் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles