‘தலைமன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கவும்’

தலைமன்னார்- ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையை விரைவில் மீண்டும் ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சரிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

” குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்திய தரப்பு தயாராக இருக்கின்றது. எனினும், தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து இதற்கான பணியை விரைவில் ஆரம்பிக்கவும்.

யுத்தத்தால் இந்தியா சென்றவர்கள் இங்கு வர விரும்புகின்றனர். விமானத்தை வருவதற்கு சிக்கல். பொருட்களை கொண்டுவரமுடியாது. எனவே, கப்பல் சேவையை ஆரம்பிக்கவும்.” – என்றார்.

Related Articles

Latest Articles