பதுளை பசறை பிரதான வீதியில் விபத்து.

பதுளை 3 ம் கட்டைப் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மொனராகலையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த சீருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதோடு சீருந்தை தொடர்ந்து வந்து கொண்டிருந்த உந்துருளி ஒன்றும் முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த சாரதி உட்பட நால்வரும் உந்துருளியில் வந்து கொண்டிருந்த இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உந்துருளி சாரதி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles