ரயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை!

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலத்தன்ன ( ஒத்தக்கடை ) பகுதியிலுள்ள ரயில் கடவையின் அருகில் நின்று கொண்டிருந்த 48 வயதுடைய பெண்ணொருவர் , பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் பொல்காவெல்ல பகுதியைச் சேர்ந்தவர். எதற்காக பண்டாரவளை பகுதிக்கு வந்திருந்தார், சம்பவத்தின் பின்னணி என்ன என்பன தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று இரவு (19/01) இடம்பெற்றுள்ளது.

-ராமு தனராஜா-

Related Articles

Latest Articles